2014 தல பொங்கல்!

Webnode

அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும். விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது. 

தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர். 

50% படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர் லேன்ட் நாட்டின் பெரும் பகுதிகளில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் இரு இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடனம் அமைப்பில் அஜீத் , தமன்னா ஜோடியுடன் படமாக்கப்பட்டது. 

கடும் குளிரையும் பொருட்படுத்தாது அஜீத் குமார் படப்பிடிப்பில் தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இன்றி எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும் உற்சாகமூட்டியது. 

சந்தானம் , பலா, விதார்த் , முனீஸ் , சுஹைல் ,’நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா , ‘எதிர் நீச்சல்’ சுசா குமார், ரமேஷ் கண்ணா , இளவரசு , அப்பு குட்டி ,பிரதீப் ராவத் , கிரேன் மனோகர் , வித்யு லேகா ராமன் , தேவதர்ஷினி மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிபதிவாளர் வெற்றி , படத்தொகுப்பு காசி விஸ்வநாதன் , stunts செல்வா ,கலை மிலன் . 

முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும் , பாத்திர அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் எனக் கூறினார் தயாரிப்பாளர்கள்.