நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பல பிரதேசங்களில் காற்று கடுமையாக வீசக்கூடுமெனவும் இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரையும் கவனமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் பல பிரதேசங்களில் காற்று வீசக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் 70 கிலோ மீற்றரளவில் காணப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு அதிகளவிலான மழை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை காணப்படும்.

மட்டக்களபபில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படும்.

கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு இரவில் அதிக மழை பெய்யலாம். கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அநுராதபுரத்தில் மழைவீழ்ச்சியினளவு 8.9 ஆகவும் வெப்பநிலை 24.6 செல்சியஸ் பாகையளவிலும் பதுளையில் 20.2 பண்டாரவளை பிரதேசத்தில் 18.3 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும். நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 27.8 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக பண்டாரவளை மாவட்டத்தில் 13.3 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

பொத்துவில் பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 151.5 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.