தடையிலிருந்து தப்பினார் ஆண்டர்சன்; ஜடேஜா மீதும் தவறில்லை என்று தீர்ப்பு

தடையிலிருந்து தப்பினார் ஆண்டர்சன்; ஜடேஜா மீதும் தவறில்லை என்று தீர்ப்பு
ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா அளித்த புகாரை விசாரித்த நீதித்துறை ஆணையர் கார்டன் லூயிஸ் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தார்.
 
இன்று ஆண்டர்சன் மீதான விசாரணையுடன், ஜடேஜாவுக்கு அபராதம் விதித்ததன் மீதான மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்தது.
 
இருவர் மீதும் தவறில்லை என்று கார்டன் லூயிஸ் தீர்ப்பளித்ததாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே ஜடேஜாவுக்கு விதித்த 50% அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடந்தது. இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சிலர் சாட்சியங்கள் அளித்தனர். இவற்றை கார்டன் லூயிஸ் பரிசீலித்தார்.
 
ஆண்டர்சன் மீது லெவல் 3 புகார் அளிக்கப்பட்டது. இதில் இவர் தவறு செய்ததாக முடிவெடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது 2 போட்டிகளிளாவது தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆண்டர்சன் தப்பிவிட்டார்.
 
பிறகு ஆண்டர்சனுக்கு தண்டனை அளிக்காமல் ஜடேஜாவுக்கு மட்டும் தண்டனை கொடுத்தது சரி என்று தீர்ப்பளித்தால் தவறாக முடியும் என்று இருவரது புகார்களையும் தள்ளுபடி செய்துவிட்டார் என்று தெரிகிறது.