ஜெ.க்கு பிணை மறுப்பு : பின்னணியில் சுவாமியா?

ஜெ.க்கு பிணை மறுப்பு : பின்னணியில் சுவாமியா?

ஜெயலலிதாவின்  பிணை  மறுப்பு  பின்னணியில்  மோடி தமையிலான பா.ஜ.க. அரசு  செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. 

இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவாமி :- ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ட்விட்டர் வலைதளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். 

நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். 

ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு பிணை  வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும், இந்த விவகாரத்தில் நீதிபதி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். 

கர்நாடக நீதிமன்றம் மிக சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கருதுகிறேன்" என்று கூறியுள்ளார். இருப்பினும் சுவாமியின் இந்த கருத்து தமிழக ஆ. தி. மு.க ஆதாரவாளர்கள் மத்தியில் வெறுப்பையும், கோபத்தையும் துண்டியுள்ளது.  

அதற்கும் மேலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதவுடன் நேரடியாக மோத ஆரம்பித்துள்ளார். ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. 

அதனால் தான் ‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்பது தெட்டத்தெளிவாக வெளிப்படுகின்றது. 

இவருடைய இந்த கருத்தின் மூலம் ஜெயலலிதாவிற்கு பிணை வழங்கக்கூடாது என மோடி தமையிலான பா.ஜ.க முடிவு செய்து இதற்கு பகடைக்காயாக அரசியல் ஜோக்கர் என கூறப்படும் சுவாமியை பயன்படுத்தி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு முற்கூட்டியே ஆலோசனை வழங்கியிருக்கலாம் அதனால்தான் அரசதரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காத போதும் நீதிபதி பிணை வழங்க மறுப்பு தெரிவித்ததாக ஆ. தி. மு.க ஆதாரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.