காமன்வெல்த் திருவிழா இன்று

காமன்வெல்த் திருவிழா இன்று
20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந் திகதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க அறுவடையில் ஈடுபட்டனர். 
 
காமன்வெல்த் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலைநிகழ்ச்சிகளுடன், வண்ணமயமான வாணவேடிக்கையுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 
 
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹம்ப்டன் ஸ்டேடியத்தில் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகி 46 வயதான கைலி மினோக்கும் கலக்க உள்ளார். 
 
முன்னதாக இன்றும் சில போட்டிகள் நடக்க உள்ளன. பேட்மிண்டனில் 5 தங்கப்பதக்கத்திற்கும், சைக்கிள் பந்தயத்தில் 2 தங்கப்பதத்திற்கும், ஆக்கியில் ஒரு தங்கப்பதக்கத்திற்கும், நெட்பாலில் ஒரு தங்கப்பதக்கத்திற்கும், ஸ்குவாஷ் போட்டியில் 2 தங்கப்பதக்கத்திற்கும் இறுதி சுற்றுகள் நடக்கின்றன. இது தவிர 3 வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டங்களும் நடக்கின்றன.