ஆஸி. க்கு பட­கு­களில் வரும் அக­தி­களை கம்­போ­டி­யாவில் மீள்­கு­டி­ய­மர்த்தத் திட்டம் :

ஆஸி. க்கு பட­கு­களில் வரும் அக­தி­களை கம்­போ­டி­யாவில் மீள்­கு­டி­ய­மர்த்தத் திட்டம் :
அவுஸ்­தி­ரே­லி­யாவும் சட்­ட­வி­ரோ­த­மாக பட­கு­களில் வரும் சட்ட விரோத குடி­யேற்­ற­வா­சி­களை கம்­போ­டி­யாவில் மீளக்­கு­டி­ய­மர்த்­து­வது குறித்து அந்­நாட்­டுடன் உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.
 
இது தொடர்­பாக உடன்­ப­டிக்கை இன்று வெள்­ளிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் கூறினார்.
 
இதன் பிர­காரம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வரு­ப­வர்­களின் ஒரே தெரிவு கம்­போ­டி­யா­வுக்கு சென்று அங்கு குடி­ய­மர்­வ­தாக உள்­ள­தாக அவர் தெரி­வித்தார். இந்­நி­லையில் மேற்­படி உடன்­ப­டிக்­கைக்கு மனித உரி­மைகள் குழுக்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.
 
அக­தி­களை கையா­ளு­வ­தற்­கான போதிய வச­தி­க­ளற்ற நாடொன்­றுக்கு அவர்­களை அனுப்பி தனது அக­திகள் தொடர்­பான சர்­வ­தேச கடப்­பாட்டை அவுஸ்­தி­ரே­லியா தவ­றி­யுள்­ள­தாக அந்த குழுக்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.
 
அவுஸ்­தி­ரே­லி­யாவின் தற்­போ­தைய கொள்கை­களின் பிர­காரம் பட­கு­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் அவர்­க­ளது புக­லி­டக்­கோ­ரிக்கை பரி­சீ­லிக்­கப்­பட்டு அவர்கள் அக­திகள் என ஏற்­றுக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் அவர்கள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வெளியில் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­ப­டு­வார்கள்.
 
இது­தொ­டர்பில் கம்­போ­டி­யாவின் குடி­வ­ரவு திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் சோக்பால் விப­ரிக்­கையில்;
 
தமது நாட்டில் குடி­ய­மர்த்­தப்­படும் அக­திகள் தமது நாட்டின் சமூ­கத்­தி­ன­ருடன் வெற்­றி­க­ர­மாக ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வார்கள் என தெரி­வித்தார். கம்­போ­டிய தலை­நகர் மற்றும் தென்­மேற்கு மாகா­ண­மான பிரெஹ் சிஹ­ன­னோயக் ஆகிய நகர்­க­ளி­லேயே அக­திகள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­ப­டலாம் என நம்­பப்­ப­டு­கின்ற நிலையில் அந்த பிராந்­தி­யங்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் விஜயம் செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. கம்­போ­டி­யா­வா­னது கடந்த காலங்­களில் அக­தி­க­ளையும் புக­லி­டக்­கோ­ரி­கை­யா­ளர்­க­ளையும் பாது­காக்­கத்­த­வ­றிய ஒரு நாடாக இருந்­துள்­ள­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.
 
அக­திகள் செயற்­பாட்டு கூட்­ட­மைப்பின்பேச்­சாளர் அயன் றின்டோல் விபரிக்கையில்;
 
கம்போடியா ஊழல் மிக்க வறுமையான நாடு எனவும் அது தனது சொந்த பிரஜைகளை கவனித்துக்கொள்ளவே திண்டாடி வருவதாக கூறினார். இந்நிலையில் இந்த கம்போடிய உடன்படிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மேற்படி அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை சிட்னி நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.