கடுப்பில் கமல் : பெயர் மாறுமா உத்தமவில்லன்?

Webnode

விஸ்வரூபம் 2 பட வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் கமல். இருப்பினும் அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் பற்றிய தகவலும் வெளியாகி விட்டது. 

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கமல் இயக்குவதாகவும், அதில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. 

பின்னர் காஜல் நடிக்க மறுத்துவிட்டதாக கூறினார்கள். இந்த நிலையில், அப்படத்திற்கு உத்தம வில்லன் என்று கமல் பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்தநிலையில், விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் இருந்த கமலுக்கு இந்த தகவல் சென்றபோது கடுப்பாகி விட்டாராம். நானே இன்னும் வெளியில் சொல்லாதபோது எப்படி தலைப்பு வெளியானது என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

அதோடு, இப்போது கதை விசயத்தில் உஷாராகி விட்ட கமல், தலைப்பை வெளியிட்டது போன்று கதையையும் கசிய விடாதீர்கள் என்று படக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் உத்தம வில்லன் தலைப்பையும் மாற்றவுள்ளாராம்.